கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா வேதனை!
விஜய்
அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய் தொடர்ந்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி, கடைசியாக கரூரில் பிரச்சாரம் செய்தார்.
அந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக பல சினிமா மற்றும் அரசியல் வாதிகள் தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆண்ட்ரியா வேதனை!
இந்நிலையில், தற்போது ஆண்ட்ரியா மற்றும் மாஸ்க் படக்குழுவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதில், " கரூரில் நடந்த விஷயம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உறவுகளை இழந்து வாடும் அவர்களது உற்றார் உறவினர்களின் துயரத்தில் பங்கெடுத்து கொள்வதோடு, படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri