போர் முடிந்துவிடும், தலைவர்கள் கைக்குலுக்குவர் ஆனால்.. நடிகை ஆண்ட்ரியா உருக்கம்
ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சினிமாவில் சம்பாதித்து வைத்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.
இதன்பின் வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் பல லட்சம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உருக்கம்
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " போர் முடிவடையும். தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள். தாய் தனது தியாக மகனுக்காகக் காத்திருப்பாள். பெண் தனது அன்பான கணவருக்காகக் காத்திருப்பாள்" என்று இருக்கும் அந்த பதிவை தான் ஆண்ட்ரியா பகிர்ந்துள்ளார்.