என் ஆடைக்குள் அந்த நபர் கைவிட்டார்.. தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை கூறிய நடிகை ஆண்ட்ரியா..
நடிகை ஆண்ட்ரியா
பின்னணி பாடாகி, நடிகை என திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தான் இவர் தேர்தெடுத்து நடிப்பார்.
மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவர், அவள், வடசென்னை போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக ஆண்ட்ரியாவின் நடிப்பு வேற லெவலில் இருக்கும்.
இந்நிலையில், எந்த விஷயமாக இருந்தாலும் தைரியாக பேசும் நடிகை ஆண்ட்ரியா, தன்னுடைய 11வது வயதில் நடந்த மோசமாக அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
மோசமான அனுபவத்தை கூறிய ஆண்ட்ரியா
"நானும் எனது தந்தையும் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எனக்கு 11 வயது தான் இருக்கும். ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் தான் நான் அணிந்திருந்தேன். அப்போது திடீரென ஒரு நபரின் கை எனது டி-ஷர்ட் உள்ளே வருவது போல் நான் உணர்ந்தேன்".
"உடனடியாக அங்கிருந்து கொஞ்சம் முன்னாடி வந்து அமர்ந்துவிட்டேன். இந்த சம்பவத்தை தனது தாய், தந்தை இருவரிடமும் நான் கூறவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை". நான் ஏன் அதை என் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
" இதைப் பற்றி நான் எனது தந்தையிடம் சொன்னால் என் தந்தை அதற்காக நடவடிக்கையை எடுத்திருப்பார். அதானல் தான் நான் செய்யவில்லை. ஏனென்றால் நாம் அந்த வகையில் நமது சமூகத்தால் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். இதை பற்றி நீங்கள் பெரிதாக பேச வேண்டாம் என்று சமூகம் விரும்புகிறது" என பேசினார்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
