ஹேமா கமிஷன் குறித்து கேட்ட கேள்விக்கு ஆண்ட்ரியா சொன்ன பதிலால் பரபரப்பு..
ஆண்ட்ரியா
தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.
இதன்பின் வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் பல லட்சம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
ஹேமா கமிஷன்
இந்த நிலையில், சமீபத்தில் ஆண்ட்ரியா ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்ட ஒரு கடை திறப்பு விழாவிற்கு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு பத்திரிக்கையாளர்கள் ஆண்ட்ரியாவிடம், தற்போது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹேமா கமிஷன் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஆண்ட்ரியா, இந்த கடை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றி என்று கூறி ஹேமா கமிஷன் பற்றி என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம். அதை பற்றி நான் எந்த கருத்தையும் பேச விரும்பவில்லை,நோ கமெண்ட்ஸ் என்று கூறியுள்ளார். இந்த பதில் சற்று பரபரப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
