ரசிகர்களின் செயலால் கடுப்பான நடிகை ஆண்ட்ரியா ! தடியடி நடத்திய போலீஸ்..?
எதிர்பார்ப்பில் பிசாசு 2
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் வெளியாகவுள்ள பிசாசு 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவில் கடைசி நாள் திரை நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொள்வதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்கள் செயலால் கடுப்பான ஆண்ட்ரியா
இதனால் நடிகை ஆண்ட்ரியாவை காண பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் கூடியுள்ளது, வெகுநேரம் காத்திருப்பிற்கு பிறகு நடிகை ஆண்ட்ரியா அங்கு வந்துள்ளார். ரசிகர்கள் சுற்றி நின்று கொண்டதால் காரை விட்டு இறங்கமுடியாமல் தவித்துள்ளார் ஆண்ட்ரியா.
பின் காவலர்கள் உதவியுடன் மேடைக்கு சென்ற ஆண்ட்ரியா, சென்சேஷனல் ஹிட் அடித்த புஷ்பா பட பாடலை பாடியுள்ளார். பாடலை முடித்தவுடன் ரசிகர்கள் நடனமாடும் படி கேட்டதால் செம கடுப்பாகியுள்ளார் ஆண்ட்ரியா.
அதன்பின் வேறுறொரு பாடலை பாடிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார், ஆனால் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி , நிகழ்ச்சியை நிறுத்தி விடுவேன் என்று காவல்துறையினர் எச்சரித்த அமைதியாகியுள்ளனர் ரசிகர்கள்.
பீஸ்ட் - குர்கா காப்பி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் நெல்சன் !

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
