நின்றுபோன நிச்சயதார்த்தம்.. ஆனால், சேரன் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்
நின்றுபோன நிச்சயதார்த்தம்
குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக அய்யனார் துணை மாறியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போதைய கதைக்களத்தின்படி பாண்டியனுக்கு திருமணம் நடக்கவேண்டும் என்பதற்காக, தனக்கு அவசர அவரசமாக திருமணத்தை ஏற்பாடு செய்துகொண்டார் சேரன்.

ஆனால், இதில் குடும்பத்தில் உள்ள யாருக்கும் உடன்பாடு இல்லை. சரி, சேரனுக்கு இதில் மனப்பூர்வமான சம்மதம் இருக்கிறது, நாம் எதுவும் செய்வதற்கு இல்லை என அனைவரும் நிச்சயதார்த்தத்திற்கு கிளம்பினார்கள்.
ஆனால், இந்த நிச்சயத்தை வேண்டாம் என புரோக்கரிடம் கூறிவிட்டதாக சொல்லி பெண் வீட்டார் அதிர்ச்சி கொடுத்தனர். நிச்சயதார்த்தம் நின்றுபோன நிலையில், அனிஷிடம் தனது வேதனையை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் சேரன்.

அடுத்து நடக்கப்போவது
இந்த நிலையில், தனது தங்கை சந்தாவை திருமணம் செய்துகொள்வீர்களா என சேரனிடம் அனிஷ் கேட்க, சேரன் முகத்தில் புன்னகை வருகிறது.

பிறகு என்ன, அடுத்து சேரனின் திருமண கொண்டாட்டம் அய்யனார் துணை சீரியலில் ஆரம்பம்தான்.