நடிப்பு சொல்லி தருவதாக பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த த்ரிஷ்யம் நடிகர்! இளம்பெண் மீ டூ புகார்
பிரபல மலையாள நடிகர் அனீஷ் மேனன் தற்போது மீ டு புகாரில் சிக்கி இருக்கிறார். அவர் த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
அனீஷ் மேனன்
மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கும் அவர் நடிப்பு பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறார். அங்கு அவரிடம் நடிப்பு கற்றுக்கொள்ள வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்திருப்பது பற்றி தற்போது தெரியவந்திருக்கிறது.
அவர் தகாத முறையில் தொட்டதால் அந்த பெண் தனது அம்மாவையும் கிளாசுக்கு அழைத்து வந்திருக்கிறார். ஆனால் அப்போதும் அனீஸ் சில்மிஷத்தை நிறுத்தவில்லை. இதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதி என கூறி இருக்கிறார்.

தகாத முறையில் நடந்தார்..
ஆரம்பத்தில் கையை படித்த அவர் அதன் பின் போக போக உடலில் மற்ற இடங்களில் தொட ஆரம்பித்து இருக்கிறார். 'உனக்கு லவ் எக்ஸ்பிரஷன்கள் சரியாக வரவில்லை என சொல்லி' அவர் தனியாக க்ளாஸ் எடுத்து இருக்கிறார். அப்போது அவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து இருக்கிறார். அதன் பின் அவரை பிடித்துகொண்டு உதட்டை கடித்து இருக்கிறார்.
அதன் பின் பெற்றோருக்கு போன் செய்த அந்த பெண் இனி மோனோ ஆக்டிங் வேண்டவே வேண்டாம் என கூறி விட்டாராம். ஆனால் நடந்த சம்பவம் பற்றி அவர்களிடம் சொல்லவில்லை.
அதன் பிறகு தற்போது தான் இதை வெளியிட்டு இருக்கிறார் அவர். தன்னை தொடர்ந்து மேலும் பல பெண்கள் அவரை பற்றி வெளிப்படையாக இனி புகார் அளிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் கூறி உள்ளார்.
