எனக்கு வயது 17 தான், ஏன் அந்த மாதிரி கேள்வி கேட்கிறீங்க!! அனிகா ஓபன் டாக்
அனிகா
மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த அனிகா, கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானார்.
இதனை அடுத்து இவர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நிலையில், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் அனிகா நடிக்கவுள்ளார். இப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் அனிகா.

ஓபன் டாக்
இந்நிலையில் அனிகா அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில், 'நீங்கள் பீர் அருந்துவீர்களா? இல்லை ஒயின் அருந்துவீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அனிகா, "எனக்கு இப்போது 17 வயதுதான் ஆகிறது. அதற்கு இந்த மாதிரி கேள்வி கேட்குறீங்க. இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீங்க" என்று காட்டமாக தெரிவித்தார்.

50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri