கதாநாயகியாகும் அஜித்தின் ரீல் மகள்.. குவியும் வாழ்த்துகள்

By Kathick Aug 19, 2022 04:30 AM GMT
Report

அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால். கவுதம் மேனன் இயக்கி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

அனிகா 

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அனுஷ்கா, விவேக், அருண் விஜய், திரிஷா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். மேலும், அஜித்துக்கு மகளாக அனிகா நடித்திருந்தார்.

கதாநாயகியாகும் அஜித்தின் ரீல் மகள்.. குவியும் வாழ்த்துகள் | Anikha Makes Her Heroine Debut In Mollywood

என்னை அறிந்தால் மூலம் அனிகாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. இதை தொடர்ந்து தமிழ், மலையாளம் என இரு திரையுலகிலும் பிசியான குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

கதாநாயகியாக அறிமுகம் 

இந்நிலையில், இதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, மலையாளத்தில் உருவாகவுள்ள 'ஓ மை டார்லிங்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

கதாநாயகியாகும் அஜித்தின் ரீல் மகள்.. குவியும் வாழ்த்துகள் | Anikha Makes Her Heroine Debut In Mollywood

இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டுள்ளது. கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை அனிகாவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US