கிளாமர் புகைப்படங்களுக்கு வந்த மோசமான விமர்சனங்கள்.. 19 வயது அனிகா கொடுத்த பதிலடி
அனிகா
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திராக நடித்து பிரபலமானவர் தான் அனிகா. மேலும் இவர் நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா 'ஓ மை டார்லிங்' படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்களை சரியான வரவேற்பு கொடுக்கவில்லை. தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள PT சார் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

பதிலடி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அனிகா, தனக்கு வரும் மோசமான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அதில், சினிமாவில் இருக்கும் நடிகைகள் இந்த மாதிரியான விஷயங்களை சந்தித்து வருகிறார்கள். நான் கிளாமராக டிரஸ் பண்ணுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.
தப்பான விமர்சனங்கள் வரும், இது வாழ்க்கையின் ஒரு பகுதி தான். எப்படி டிரஸ் பண்ணாலும் தப்பா தான் பேசுவாங்க.. இருப்பினும் சில தப்பான விமர்சனங்கள் என்னை ரொம்பவே பாதிக்கும்.. நானும் மனுஷன் தானே என்று அனிகா கூறியுள்ளார்.

இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம் News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri