ஆசிட் அடிப்பேன் சொல்றாங்க, பயமா தான் உள்ளது- சிறகடிக்க ஆசை சீரியல் விஜயா பகிர்ந்து ஷாக்கிங் தகவல்
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் முக்கிய கவனிப்பை பெற்றுள்ளது சிறகடிக்க ஆசை சீரியல்.
இப்போது இந்த தொடர் கதையில் வீட்டு மருமகள்களுக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முத்துவை வைத்து பிரச்சனை கிளப்பி ஸ்ருதி-ரவியை அண்ணாமலை வீட்டில் இருந்து பிரிக்க ஒரு சதி நடக்கிறது.
அதேபோல் அப்பா வரார் வரார் என ரோஹினி கூறிக்கொண்டு இருக்கிறார், இந்த அப்பா பிரச்சனையில் இருந்து தப்பிக்க அவர் முத்துவை வைத்து பிரச்சனை கிளப்ப இன்னொரு பக்கம் பிளான் போடுகிறார்.
கடைசியில் என்ன நடக்கப்போகிறது என்பது நாளை தெரிய வருமா அல்லது அடுத்த வாரம் முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
அனிலா ஸ்ரீகுமார்
இந்த சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவாக நடித்து வருபவர் அனிலா ஸ்ரீகுமார். இவர் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், நான் 33 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன், ஆனால் எனக்கு இதுவரைக்கும் எந்த கேரக்டரிலும் கிடைக்காத பிரபலம் இந்த சிறகடிக்க ஆசை சீரியல் கொடுத்துள்ளது.
பலர் நான் வெளியே போகும்போதெல்லாம் என்னோடு வந்து போட்டோ எடுக்கிறார்கள், ஆனால் இன்ஸ்டாவில் வீடியோ போட்டால் ஒரு சிலர் என்னை திட்டி கமெண்ட் போடுகிறார்கள்.
சீரியலில் ஏன் மீனாவை எப்போது பாடாய் படுத்துறீங்க என சொல்கின்றனர், ஒரு சிலர் உங்களை நேரில் பார்த்தால் நான் ஆசிட் அடித்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்.
இது ஒரு விதத்தில் சிரிப்பாக இருந்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது என்று சிரித்தப்படியே கூறியுள்ளார்.