தளபதி 69 படத்தில் இணைந்த அனிமல் பட பிரபலம்.. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்
தளபதி 69
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் சமீபத்தில் GOAT படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து விஜய் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் படக்குழு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. விஜய் - ஹெச். வினோத் இருவரும் முதல் முறையாக இப்படத்திற்காக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று மாலை 5 மணி முதல் வருகிற 3-ந் தேதி வரை இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.
தளபதி 69 படத்தில் இணைந்த பிரபலம்
அதன்படி, தற்போது அனிமல் படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பிய பாபி தியோல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யாவின் கங்குவா படத்திலும் அவர் தான் வில்லனாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
100% official now, Super happy & excited to announce that @thedeol joins #Thalapathy69 cast ?#Thalapathy69CastReveal#Thalapathy @actorvijay sir #HVinoth @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 pic.twitter.com/KKCfaQZtON
— KVN Productions (@KvnProductions) October 1, 2024
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu