ஐந்து நாட்களில் ரூ. 500 கோடியை நெருங்கும் அனிமல்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா
அனிமல்
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அனிமல்.
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
சிலர் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கூறினாலும், பலரும் இப்படம் மோசமாக இருக்கிறது என கடுமையான விமர்சனங்களை தான் தெரிவித்து வருகிறார்கள். இப்படியொரு சூழ்நிலையிலும் கூட அனிமல் படம் வசூலில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.
வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்த 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 460 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கண்டிப்பாக 6வது நாள் முடிவில் ரூ. 500 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அனிமல் மேலும் புதிய சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைக்கிறதா என்று.

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
