மூன்று நாட்களில் பட்டையை கிளப்பிய அனிமல் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
அனிமல்
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் அனிமல்.
ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்க நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சிலர் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கூறினாலும், பலரும் இப்படம் மோசமாக இருக்கிறது என கடுமையான விமர்சனங்களை தான் தெரிவித்து வருகிறார்கள்.
வசூல்
விமர்சனம் ஒரு பக்கம் இருக்க வசூலில் ஒவ்வொரு நாளும் பட்டையை கிளப்பி வருகிறது அனிமல்.
ஆம், இப்படம் வெளிவந்து மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 350 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
விரைவில் ரூ. 500 கோடியை தொடும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
