வசூலை வாரிக்குவிக்கும் அனிமல் படத்தின் இரண்டு நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
அனிமல்
ரன்பீர் கபூர் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி கடந்த 1ம் தேதி வெளிவந்த திரைப்படம் அனிமல்.
இப்படம் இந்த ஆண்டு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, ரன்பீர் கபூரின் ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இரண்டு நாள் வசூல்
முதல் நாளே உலகளவில் ரூ. 116 கோடிக்கும் மேல் அனிமல் படம் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் முடிவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, அனிமல் படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 236 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu