குறுக்கு வழியில் 1000 கோடி வசூல் செய்தாரா ஷாருக்கான்.. கடுமையாக பேசிய அனிமல் பட பிரபலம்
ஷாருக்கான்
இந்திய சினிமாவில் பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என அழைத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பதான், ஜவான் மற்றும் dunki என மூன்று திரைப்படம் வெளிவந்தது.
இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு திரைப்படங்களும் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதற்கு காரணம் நடிகர் ஷாருக்கான் கார்ப்ரைட் புக்கிங் செய்கிறார் என்றும், அதனால் தான் அவரால் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்ய முடிகிறது என்றும் புகார் எழுந்தது.
கார்ப்ரைட் புக்கிங் என்றால் ஷாருக்கான் தன்னுடைய செல்வாக்கு மூலம் பல்க் புக்கிங் செய்வதை தான் கார்ப்ரைட் புக்கிங் எனகூறப்படுகிறது.
கடுமையாக பேசிய அனிமல் பட பிரபலம்
இந்நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் அனிமல் படத்தை தயாரிப்பாளர் பேசியுள்ளார். அனிமல் படத்தின் தயாரிப்பாளர் பிரணாய் வங்கா ரெட்டி நாங்கள் அனிமல் படத்திற்காக கார்ப்ரைட் புக்கிங் செய்யவில்லை.
அதனால் தான் எங்களால் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலை தொட முடியவில்லை. மேலும் அது எங்களுக்கு தேவையும் இல்லை என கடுமையாக பேசியுள்ளார். இந்த விஷயம் தற்போது பெரும் சர்ச்சையை பாலிவுட் சினிமாவில் ஏற்படுத்தியுள்ளது.