அனிருத்தின் பிரம்மாண்ட நிகழ்ச்சி திடீர் ரத்து.. ரசிகர்கள் அதிர்ச்சி
இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இசை அமைத்து வருகிறார். மேலும் கன்னடத்திலும் விரைவில் அவர் அறிமுகம் ஆகிறார்.
படங்களுக்கு இசையமைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவர் பல நாடுகளுக்கு சென்று இசை கச்சேரிகள் நடத்தி வருகிறார்.அதன் மூலமாகவும் பெரிய அளவில் சம்பாதிக்கிறார். அவரது கச்சேரிக்கு பெரிய ரசிகர் கூட்டமும் வருகிறது.
வரும் ஜூலை 26 ஆம் தேதி அனிருத் இசை நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருந்தது.
நிகழ்ச்சி ரத்து
ஆனால் தற்போது அனிருத்தின் concert நிகழ்ச்சி தற்போது திடீரென ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
டிக்கெட்டுக்கு அதிகம் டிமாண்ட் இருப்பதால் இன்னும் பெரிய இடத்தில் concert நடத்த இடம் மாற்றப்பட்டுஇருக்கிறது என அனிருத் அறிவிப்பில் கூறி இருக்கிறார்.