இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. என்னது, அவர் ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடித்துள்ளாரா
தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.
இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், அடுத்தடுத்து அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.
இவர் இசையில் தற்போது இந்தியன் 2, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், பீஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் ரவி மற்றும் லட்சுமி தம்பதிக்கு பிறந்தவர் தான் அனிருத். நடிகர் ரவி தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினியின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான, படையப்பா படத்திலும் ஒரு சிறிய காட்சியில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.