அரசன் படத்திலிருந்து அனிருத் விலகி விட்டாரா? தயாரிப்பாளர் தாணு கொடுத்த பதில்
சிம்பு என்றாலே வம்பு என்கிற பேச்சு சினிமா துறையில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது தான் இதற்கு காரணம்.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சிம்பு மீது போடப்பட்ட ரெட் கார்டு காரணமாக அரசன் படத்தின் ஷூட்டிங் சில காலம் தடைப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அனிருத் விலகி விட்டாரா?
இசையமைப்பாளர் அனிருத் திருமணம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அவர் அடுத்த சில மாதங்களுக்கு சினிமா பணிகளில் இருந்து விலகி இருக்கிறார் எனவும், அதனால் அவர் அரசன் படத்திலிருந்து விலகி விட்டதாக ஒரு தகவல் சமீபத்தில் பரவி வந்தது.
அது பற்றி தயாரிப்பாளர் தாணுவிடம் கேட்டபோது, "யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது" என ஒரே வரியில் பதில் அளித்திருக்கிறார்.
மேலும் அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோ அதிக ட்ரோல்களை சந்தித்தது பற்றி கேட்டதற்கு, அந்த வீடியோ அதிகம் பார்வைகளை தான் பெற்று இருக்கிறது என கூறியுள்ளார் அவர்.