அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. உறுதி செய்த ரஜினியின் உறவினர்..
அனிருத்
இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் இசையில் அடுத்ததாக ஜனநாயகன், தர்மன், லோகேஷ் - அல்லு அர்ஜுன் படம், ஜெயிலர் 2, DC உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளன.

படத்திற்கு இசையமைப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கச்சேரிகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு நாடாக சென்று அனிருத் நடத்தும் கச்சேரிகள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெறுகின்றன.
திருமணம்
இசையமைப்பாளர் அனிருத் பிரபல தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தொடர்ந்து பலவிதமான செய்திகளை நாம் பார்த்தோம். ஆனால், அவை யாவும் வதந்திதான் உண்மை இல்லை என கூறப்பட்டது.

முத்துவை அரிவாளால் வெட்ட வந்த சிந்தாமணி.. சத்யா - ரேகா திருமணத்தில் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
இந்த நிலையில், ரஜினிகாந்தின் உறவினரும் பிரபல நடிகருமான YG மகேந்திரன், YouTube சேனல் ஒன்றில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் விரைவில் நடக்கப்போகிறது என்று கூறியுள்ளார். இதன் மூலம் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து வெளிவந்துள்ள செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து YG மகேந்திரன் பேசுகையில், "அனிருத் மிகவும் சாதுவான பையன். அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அவருக்கு வாழ்த்துகள் சொல்ல வேண்டும். நான் கேள்விப்பட்ட தகவலின் அடிப்படையில் தான் இதனை உறுதியாக சொல்கிறேன்" என்றார்.

விரைவில் அனிருத் மற்றும் காவ்யா மாறன் தரப்பிலிருந்து நல்ல செய்தி வெளிவரும் என ரசிகர்களால் தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.