கன்னடத்தில் நுழையும் அனிருத்.. சம்பளம் இத்தனை கோடி கேட்டாரா
இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவை தாண்டி தற்போது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் முதல் முறையாக அவர் கன்னடத்தில் நுழைந்து இருக்கிறார். யாஷ் நடித்து வரும் டாக்சிக் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க போகிறார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த வருடம் மார்ச் 19ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்
டாக்சிக் படத்திற்கு இசையமைக்க அனிருத் வாங்கும் சம்பளம் பற்றிய விவரமும் வெளியாகி இருக்கிறது.
12 கோடி ரூபாய் அனிருத்துக்கு சம்பளமாக தரப்படுகிறதாம். அனிருத் இணைந்திருப்பதால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.