மாபெரும் வெற்றியடைந்த டாடா திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது கவின் கிடையாது! வேறு யார் தெரியுமா
டாடா
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல சிறந்த திரைப்படங்கள் வெளிவந்தன. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அப்படங்கள் உலகளவில் மாபெரும் வசூல் சாதனைகளையும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குட் நைட், அயோத்தி, சித்தா, போர் தொழில், பார்க்கிங், 1947 உட்பட பல திரைப்படங்கள் கடந்த ஆண்டு குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வெற்றிபெற்றது. இந்த வரிசையில் வெளிவந்த திரைப்படம் தான் டாடா. கணேஷ் கே. பாபு இயக்கிய இப்படத்தில் கவின், அபர்ணா தாஸ் இணைந்து நடித்திருந்தனர்.
கவின் முதல் ஹீரோ இல்லை
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக இயக்குனர் கற்பனை செய்து வைத்திருந்தது இசையமைப்பாளர் அனிருத்தை தானாம். அனிருத் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் தான் இந்த கதையை உருவாக்கினாராம்.
ஆனால், அதன்பின் கவினிடம் டாடா படத்தின் கதையை கூறி ஓகே செய்து, அவரை வைத்து படத்தை எடுத்து முடித்துள்ளார். அதே போல் இப்படத்தில் புது முகங்களை வைத்து தான் இயக்க வேண்டும் என இயக்குனர் முடிவு எடுத்துள்ளார். ஆனால், தயாரிப்பாளர் படம் வியாபாரம் ஆகாது என்ற நோக்கத்தினால், மக்களுக்கு பரிச்சையம்மான நடிகர், நடிகைகளை வைத்து எடுக்க கூறியுள்ளார்.
டாடா திரைப்படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், அப்படத்தின் இயக்குனர் கணேஷ் கே. பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை பகிர்ந்துகொண்டார்.

பிரித்தானியாவில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் மசோதா - 20 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை News Lankasri

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan
