Greece நாட்டில் நடந்த அனிருத்-காவ்யா மாதவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா?
அனிருத்
தமிழ் சினிமாவில் Most Eligible Bachelorஆக இருந்தவர் தான் இசையமைப்பாளர் அனிருத்.
கடந்த 2012ம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக களமிறங்க தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த திரைப்படம் 3.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவர் தான் அனிருத் தற்போது இசையமைப்பாளராக களமிறங்கி 15 வருடங்கள் ஆகிவிட்டது, தனது 15 வருட திரைப்பயணத்தை பற்றி இன்று அனிருத் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
திருமணம்
Bachelorஆக இருந்த அனிருத்திற்கு இப்போது திருமணம் நடந்து முடிந்துவிட்டது.
கடந்த நவம்பர் 11ம் தேதி அனிருத்-காவ்யா மாறனுக்கு கிரீஸ் நாட்டில் 11 மணிக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்காக குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ரசிகர்கள் அனிருத்-காவ்யா இருவரின் திருமண புகைப்படங்களை செம வைரலாக்கி வந்தனர்.
தற்போது கிரீஸ் நாட்டில் நடந்த இவர்களின் திருமண செலவு குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அனிருத்-காவ்யா திருமணத்திற்காக மட்டுமே மொத்தம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர வரும் நவம்பர் 21ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக அனிருத்-காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து காண்போம்.
ரஷ்ய பில்லியனரின் 600 மில்லியன் டொலர் சொகுசு படகால் இத்தாலி அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் News Lankasri
ரூ.52,878 கோடி முதலீடு - IDBI வங்கியை வாங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய பில்லியனர் முயற்சி News Lankasri