அனிருத் - காவ்யா மாறன் திருமணத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு! வெளிவந்த விவரம்

Report

Anirudh, Kavya maran wedding cost: கடந்த நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து தற்போது சென்னையில் திருமண வரவேற்பு விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அனிருத் - காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

அனிருத் - காவ்யா மாறன்

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி நெட்வொர்க் கலாநிதி மாறனின் மகளும், பிரபல தொழிலதிபருமான காவ்யா மாறனுக்கும் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனிருத் - காவ்யா மாறன் திருமணத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு! வெளிவந்த விவரம் | Anirudh Kavya Maran Wedding Cost

அதை தொடர்ந்து கடந்த 21-ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு விழா தொடங்கியது. இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த திருமண வரவேற்பில் முதலமைச்சர் விஜய், ரஜினிகாந்த், ஸ்டாலின், அஜித், எம்.எஸ். தோனி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

திருமணத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு

ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம் நடைபெற்ற சமயத்தில், அவர்களுடைய திருமணத்திற்கு ரூ. 4000 கோடி முதல் ரூ. 5000 கோடி வரை செலவு ஆனது என்ற தகவல் இணையத்தில் வைரலானது. அதே போல், தற்போது அனிருத் காவ்யா மாறன் திருமணத்திற்கு எவ்வளவு செலவு ஆகியுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத் - காவ்யா மாறன் திருமணத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு! வெளிவந்த விவரம் | Anirudh Kavya Maran Wedding Cost

அதன்படி, கிரீஸ் நாட்டில் நடைபெற்ற அனிருத் - காவ்யா மாறனின் திருமணத்திற்கு ரூ. 100 கோடி செலவு என்றும், சென்னையில் நடைபெற்று வரும் திருமண வரவேற்பிற்கு ரூ. 50 கோடி செலவு என்றும் மொத்தம் ரூ. 150 கோடி வரை இவர்களுடைய திருமணத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US