அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் விஜய் அணிந்து வந்த ஆடையின் விலை.. முழு விவரம் இதோ

By Karthick Raja Nov 22, 2026 05:31 AM GMT
Report

Anirudh - Kavya Reception, CM Vijay Dress price: நேற்று அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழா ஆடம்பரமாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். இந்த திருமண வரவேற்பில் விஜய் அணிந்து வந்த ஆடை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், அந்த ஆடையின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நீங்கள் டாக்சிக் உறவில் இருந்தால், உடனடியாக விலகிவிடுங்கள்! பிக் பாஸ் வின்னர் அர்ச்சனா பேட்டி

நீங்கள் டாக்சிக் உறவில் இருந்தால், உடனடியாக விலகிவிடுங்கள்! பிக் பாஸ் வின்னர் அர்ச்சனா பேட்டி

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் கடந்த 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. அதை தொடர்ந்து, நேற்று சென்னையில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடந்தது. அதில் ரஜினி, மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் விஜய் அணிந்து வந்த ஆடையின் விலை.. முழு விவரம் இதோ | Anirudh Kavya Reception Cm Vijay Dress Price

மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அனிருத் - காவ்யா ஜோடியை வாழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி அங்கு ரஜினிகாந்த், ஸ்டாலின் உள்ளிட்டோரையும் சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய் அணிந்து வந்த ஆடை

இந்த திருமண வரவேற்பில் முதலமைச்சர் விஜய் ராயல் லுக்கில் ஆடை அணிந்து வந்திருந்தார். இந்நிலையில், இந்த ஆடையில் உள்ள Navy bandhgala - ரூ. 2,13,000, Silk pocket square - ரூ. 7,500 மற்றும் Gold button set similar ரூ. 1,47,000 என இந்த ஆடையின் மொத்த விலை ரூ. 3,67,000 என கூறப்படுகிறது.

அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் விஜய் அணிந்து வந்த ஆடையின் விலை.. முழு விவரம் இதோ | Anirudh Kavya Reception Cm Vijay Dress Price

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US