அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கிய கலாநிதி மாறன்
Anirudh Marriage invitation for CM Vijay: இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கியுள்ளார் கலாநிதி மாறன்.
அனிருத் திருமணம்
கடந்த சில மாதங்களாகவே அனிருத் - காவ்யா மாறன் திருமணம் பற்றிய பேச்சுதான் சினிமா வட்டாரத்தில் உலா வந்தது. ஆனால், அவர்கள் இருவரும் தங்களது காதல் பற்றியோ, திருமணம் பற்றியோ எந்த ஒரு விஷயமும் கூறவில்லை.

ஆனால், தற்போது அனிருத் - காவ்யா மாறன் திருமணத்திற்கான ஏற்படும் தடல்புடலாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோரை நேரில் சென்று சந்தித்து திருமண அழைப்பிதழை கலாநிதி மாறன் வழங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும், திருமண வரவேற்பு விழா சென்னையில் நவம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை, குடும்பத் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.
