ஹீரோவாக நடிக்கவிருந்த அனிருத்.. தவறிப்போன சூப்பர்ஹிட் திரைப்படம்
இசையமைப்பாளர் அனிருத்
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் கத்தி, அஜித்துடன் வேதாளம், ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மேலும், தற்போது பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், படங்களில் இடம்பெறாத ம்யூசிக் வீடியோக்களில் நடித்தும் இருக்கிறார் அனிருத்.
சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட அனிருத்
இந்நிலையில், அனிருத் ஒரு சூப்பர்ஹிட் படத்தில் நடிக்கவிருந்தாராம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடி தான்.

அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு முன் பல ஹீரோக்கள் நடிப்பதாக இருந்தது. அதே போல் விக்னேஷ் சிவனின் ஹீரோ சாய்ஸ் லிஸ்டில் இசையமைப்பாளர் அனிருத்தின் பெயரும் இருந்ததாம்.
ஆனால், அப்போது இருந்த சில காரணங்களால் அனிருத் இப்படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.