அனிருத் இசையமைக்கும் புது ஆல்பம் பாடல்.. இணையும் பிரபல நடிகை யார் தெரியுமா ?
அனிருத்
இன்று இவர் இசை இல்லாமல் எந்த மாதமும் படங்கள் வராமல் இல்லை. அந்த அளவிற்கு ஒரு முன்னணி இசையமைப்பாளராக பல நட்சத்திரங்களின் படங்களில் இசையமைத்து புகழின் உச்சத்தில் வலம் வருபவர் அனிருத்.
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளுக்கு படு பிஸியாக இசையமைத்து வரும் இவருடைய இசையமைப்பில் வரும் அக்டோபர் 10 - ம் தேதி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வெளிவர உள்ளது.
படங்களுக்கு இசையமைப்பது மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார்.
புது ஆல்பம் பாடல்
இந்நிலையில், அனிருத் ஒரு ஆல்பம் பாடல் இசையமைத்து பாடும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும், அந்த பாடலில் இவருடன் இணைந்து நடனமாட தெலுங்கு பிரபல நடிகையான ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், ஸ்ரீலீலா இன்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக வில்லை என்பதால் அவரை விரைவில் ஒரு படத்தில் நடிக்க வைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.