ஜெயிலர் படத்திற்கு இசையமைக்க அனிருத் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்து, உலகளவில் ரூ. 500 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
அனிருத்
கண்டிப்பாக இப்படம் ரூ. 600 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்திற்கு வெற்றிக்கு நெல்சன் எந்த அளவிற்கு காரணமோ அதே அளவிற்கு அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் காரணம்.
ரஜினிக்காக நெல்சன் வைத்த ஒவ்வொரு காட்சிகளையும் தனது பின்னணி இசையின் மூலம் மாஸாக காட்டியவர் அனிருத்.
சம்பளம்
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு இசையமைக்க ரூ. 7 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் அனிருத்.
கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் இலங்கை பிரபலம் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- புகைப்படங்கள் இதோ
You May Like This Video

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
