இசையமைப்பாளர் அனிருத் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

Kathick
in பிரபலங்கள்Report this article
3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.
இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், அடுத்தடுத்து அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.
இவர் இசையில் தற்போது இந்தியன் 2, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், பீஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உருவாகி வருகிறது.
சமீப காலமாக இணையத்தில், முன்னணி பிரபலங்களின் சொத்து மதிப்பு, சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத், ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, ரூ. 2 கோடி வரை, அனிருத் சம்பளம் வாங்கி வருகிறார் என்று தகவல் தெரிவிக்கின்றன.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.ஆனாலும் திரைவட்டாரங்களில் இவை தான், கூறப்படுகிறது.