Fan Boy-யாக களமிறங்கும் அனிருத்.. சம்பவம் செய்யப்போகும் குட் பேட் அக்லி First சிங்கிள்
குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளிவந்த நிலையில், முதல் பாடல் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கினற்னர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்தில் கமிட்டான நிலையில், பின் சில காரணங்களால் அவர் விலகினார். தற்போது அவருக்கு பதிலாக ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
First சிங்கிள்
குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், இந்த பாடலை அஜித்தின் Fan Boy இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த பாடலுக்கு ரோகேஷ் வரிகள் எழுதியுள்ளாராம். இவர் தான் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு வரிகள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் முதல் பாடகர் வரை அஜித்தின் Fan Boy-களாக ஒன்று கூடியுள்ள நிலையில், கண்டிப்பாக இந்த பாடல் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.