கோடிகளில் சம்பளம், ஆனால் அதுமட்டும் இல்லை.. வருத்தத்துடன் பேசிய அனிருத்
அனிருத்
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அனிருத். 3 படத்தில் ஆரம்பித்த இவருடைய பயணத்தைத் தொடங்கியவர் இன்று பான்-இந்தியா அளவில் வளர்ந்துள்ளார்.

விஜய், ரஜினி, அஜித், ஜூனியர் என்.டி.ஆர், ஷாருக்கான் என பல சூப்பர்ஸ்டார்களின் படங்கள் இவருடைய இசையில்தான் உருவாகின்றன. மிகவும் பிஸியான இசையமைப்பாளராக உள்ள அனிருத், சமீபத்திய பேட்டி ஒன்றில் பல கோடிகள் சம்பளம் வாங்கினாலும் சந்தோஷம் இல்லை என பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வருத்தத்துடன் பேசிய அனிருத்
இதில் அவர், "சிறிய வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும்போது ரூ. 500 சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். அப்போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் மனதில் ஏற்படும். சில நிகழ்வுகளில், சம்பளம் தராமல் வெறும் வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள்.

இப்போது கோடிகளில் சம்பளம் மாறிவிட்டது. பம்பரமாக இசைப்பணியில் மூழ்கி கிடந்தாலும், முன்பு இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. என்னதான் வேலையில் பரபரப்பாக இருந்தாலும், அந்த சிறு வயது சந்தோஷத்தை மட்டும் மறக்கவே முடியாது" என கூறியுள்ளார்.
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
ரூ.3,108 கோடி மதிப்பில் சென்னைக்கு குடிநீர் திட்டம் - முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார் IBC Tamilnadu