கூலி படத்தின் முதல் விமர்சனம்.. இசையமைப்பாளர் அனிருத் கூறிய தகவல்
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் கூலி.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சோபின் ஷபீர் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படி மாபெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து உருவாக்கி வரும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது.
படத்தின் முதல் விமர்சனம்
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், படத்தை பார்த்துவிட்டு தனது கருத்துக்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் "கூலி திரைப்படத்தை முழுமையாக பார்த்துவிட்டேன். வேறொரு Shadeல் அது உள்ளது. சூப்பர் இருக்கு. உற்சாகமாக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு IBC Tamilnadu
