கண்கலங்கிய அனிருத் ! விக்ரம் திரைப்படம் குறித்து மேடையில் அவர் சொன்ன விஷயம்..

By Jeeva Jun 01, 2022 08:50 AM GMT
Report

கண்கலங்கிய அனிருத் 

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது.

விஜய் சேதுபதி, பகத் பாசில் என இரண்டு டாப் நடிகர்கள் மட்டுமின்றி இப்படத்தில் சூர்யாவும் நடித்திருக்கிறார்.

யாரும் எதிர்பார்க்காத இந்த கூட்டணியை இசைவெளியீட்டு விழாவில் உறுதி செய்தார் லோகேஷ், மேலும் விக்ரம் படத்தில் சூர்யாவின் வெறித்தனமான லுக் போஸ்ட்டரையும் வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் ஹைதெராபாத்தில் நடைபெற்றது, அதில் கமலுடன் லோகேஷ், அனிருத் கலந்து கொண்டிருந்தனர். அப்போது பேசிய அனிருத் "விக்ரம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம், இன்று அப்படத்தின் இறுதி பணியை முடித்திருக்கிறோம்.

நான் பொதுவாக எமோஷனல் நபர் கிடையாது. ஆனால் விக்ரம் மற்றும் அப்படத்தில் பணியாற்றியதை நான் மிஸ் செய்ய போகிறேன். இன்று நாங்கள் படத்தை பார்க்கும் போது நான் லோகேஷிடம் சென்று கண்கலங்கிவிட்டேன்.

படத்தில் கமல் சாரின் நடிப்பு பிரமிக்க வைத்துவிட்டது. விக்ரம் படத்தில் பணியாற்றியது ரொம்பவும் பெருமையாக உள்ளது. 

கண்கலங்கிய அனிருத் ! விக்ரம் திரைப்படம் குறித்து மேடையில்  அவர் சொன்ன விஷயம்.. | Anirudh Teared About Vikram Movie

https://cineulagam.com/article/actress-nayanthara-home-in-chennai-1654066200


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US