விரைவில் முன்னணி நடிகர்களை வைத்து இசையமைப்பாளர் அனிருத் தொகுத்து வழங்க போகும் நிகழ்ச்சி !
அனிருத்தின் புதிய அவதாரம்
தமிழ் சினிமாவின் டாப் இசைமைப்பாளராக திகழ்ந்து வருபவர் அனிருத் ரவிச்சந்திரன், நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் இவரின் இசைக்கும் காண படுகிறது.
மாதத்திற்கு ஒரு முறை இவரின் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விக்ரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
தொட்ட படங்கள் எல்லாம் ஹிட்டாகி வரும் அனிருத் தற்போது புதிதாக தொகுப்பாளர் அவதாரம் எடுக்க போகிறாராம். ஆம், புதிதாக வந்துள்ள aha-OTT வழங்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அனிருத் தொகுப்பாளராக இருக்கிறார்.
அதில் அவர் முன்னணி நடிகர்களுடன் நேர்காணலில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்..