மீண்டும் இணையும் அஞ்சான் கூட்டணி.. வெளிவந்த சூப்பர் அப்டேட்
மீண்டும் இணையும் அஞ்சான் கூட்டணி
சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அஞ்சான். லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தார்.
மேலும் மனோஜ் பாஜ்பாய் வித்யூத் ஜாம்வால், சூரி, என பலரும் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த அஞ்சான் கூட்டணி உருவாகவுள்ளதாம். ஆம், மீண்டும் சூர்யா மற்றும் லிங்குசாமி இணைந்து படம் பண்ணப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் ஒன் லைன் கூட சூர்யா கேட்டுள்ளாராம். விரைவில் இப்படத்தின் முழு கதையையும் கேட்டபின், இருவரும் இணைய பெரிதும் வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் இருவரும் இணைவார்களா என்று?

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu
