பிரமாண்ட படத்தில் கமிட்டான நடிகை அஞ்சலி - அதுவும் இவருடைய இயக்கத்தில்
தமிழில் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
இதையடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
சமீப காலமாக தமிழில் பட வாய்ப்புகள் பெரிதும் இல்லாத காரணத்தினால், மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி.
அண்மையில் கூட, பவன் கல்யாண் நடிப்பில், தெலுங்கில் வெளியான ‘வக்கீல் சாப்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஷங்கர், ராம்சரண் கூட்டணியில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் பிரமாண்ட படத்தில், நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan