அஞ்சலியின் "ஃபால்" வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம்
தற்போது ஹாட்ஸ்டாரில் அஞ்சலி நடிப்பில் Fall என்ற வெப் சீரியல் வெளியாகி இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என வாங்க பார்க்கலாம்.
கதை
சீரிஸின் தொடக்கத்திலேயே திவ்யா (அஞ்சலி) அவர் நடத்தி வரும் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் மாடிக்கு செல்கிறார். அங்கே அவர் எதையோ யோசித்துக்கொண்டு நிற்க இறுதியில் திடீரென கீழே விழுந்துவிடுகிறார். அவரை ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்கிறார்கள். அவர் கோமாவுக்கு சென்றுவிடுகிறார்.
போலீஸ் விசாரணையில் அஞ்சலியின் தங்கை "நான் தான் முதலில் பார்த்தேன்" என கூறுகிறார். அதன் பின் அண்ணனிடம் சொல்லி அவர் வந்து தான் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசை வர வைத்ததாகவும் கூறுகிறார் அவர். அஞ்சலியின் அண்ணனாக எஸ்பிபி சரண் நடித்திருக்கிறார்.
ஆறு மாதங்களுக்கு பின் என அடுத்த காட்சியே வருகிறது. அப்போதும் அஞ்சலி கோமாவில் தான் இருக்கிறார். அவரை அம்மா - அப்பா அக்கறையுடன் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஆனால் அண்ணன் எஸ்பிபி சரண் மட்டும் அஞ்சலி வைத்திருக்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமியை விற்க அவசரம் காட்டுகிறார். ஆனால் அதற்க்கு அப்பா ஒப்புக்கொள்வதில்லை. அந்த இடத்தை வாங்க அஞ்சலியை காதலித்த டேனியல் தான் முயற்சி செய்கிறார். மெட்ரோ ப்ராஜெக்ட் வருவதால் இடத்தின் மதிப்பு 30 மடங்கு கூடும், அதை வைத்து பெரிய லாபம் பார்க்கலாம் என்பது அவரது திட்டம். அதற்காகவே அஞ்சலியை காதலிப்பது போல நடித்தும் வந்திருக்கிறார்.
யார் குற்றவாளி?
அஞ்சலி கீழே விழுந்தது எப்படி? அவராக குதித்தாரா அல்லது யாராவது தள்ளிவிட்டார்களா? கோமாவில் இருந்து திரும்பி வருவாரா இல்லையா?
சொத்தை விற்க கோமாவில் இருக்கும் அஞ்சலியி கருணை கொலை செய்ய முடிவு எடுக்க வைக்கும் அளவுக்கு மோசமாக நடந்துகொள்ளும் அண்ணன் தான் குற்றவாளியா?
அல்லது சொத்துக்காக காதலிப்பது போல நடித்த டேனியல் தான் குற்றவாளியா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தான் மீதமிருக்கும் Fall வெப் சீரிஸ்.
சீரிஸ் எப்படி இருக்கு?
சுவாரஸ்யமான கதை, யார் குற்றவாளி என நம்மையும் யோசிக்கவைக்கும் திரைக்கதை என நன்றாக தான் நகர்கிறது ஃபால் வெப் சீரிஸ். எல்லோருமே பாப்புலர் நடிகர்கள் என்பதால் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்து இருக்கிறார்கள். ஆனால் மிக மிக மெதுவாக நகரும் கதை தான் நம் பொறுமையை அவ்வப்போது சோதிக்கும் வகையில் இருக்கிறது.