திரிஷாவை பேட்டியெடுத்த பிரபல நடிகை அஞ்சலி ! சன் டிவி-ல் ஒளிபரப்பான நிகழ்ச்சி..
திரிஷாவை பேட்டியெடுத்த அஞ்சலி
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் ஏகப்பட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.
குறிப்பாக விஜய், அஜித் , சூர்யா, விக்ரம் என டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அப்படியான டாப் நடிகை திரிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், அவர் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி சன் டிவி-ல் ஒளிபரப்பான பழைய நிகழ்ச்சியில் திரிஷாவை பேட்டியெடுத்துள்ளார் பிரபல நடிகை அஞ்சலி. த்ரிஷா நடிக்க வந்த ஆரம்பத்தில் சென்னையில் உள்ள மாயாஜால் மாலில் விஜயசாரதியுடன் இணைந்து சில மாடல்களும் ரசிகைகளாக பேட்டி எடுத்துள்ளனர்.
அந்தப் பேட்டியில் நடிகை அஞ்சலி மாடல் அழகியாக கலந்து கொண்டு த்ரிஷாவை பேட்டி எடுத்துள்ளார். இதோ அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.


