ஜெய்யுடனான காதலால் தான் சினிமா வாழ்க்கை வீணானதா?- அஞ்சலி கூறிய பதில்
அஞ்சலி-ஜெய்
தமிழ் சினிமாவில் பிரபலங்களில் நிஜத்தில் ஜோடி சேர்ந்தவர்கள் பலர் உள்ளார்கள். அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா, நயன்தாரா-விக்னேஷ் சிவன், கௌதம் கார்த்திக்-மஞ்சிமா என இப்படி பிரபலங்களை கூறிக்கொண்டு போகலாம்.
இவர்களின் லிஸ்டில் ஜெய் மற்றும் அஞ்சலி இணைவார்கள் என ரசிகர்களால் எதிர்ப்பார்ப்பார்க்கப்பட்டது. எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துவந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்வார்கள் எனப்பட்டது.
ஆனால் இப்போது என்னவென்றால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள் என்கின்றனர்.
அஞ்சலி கூறிய பதில்
தற்போது அஞ்சலி Fall என்ற படத்தில் நடித்துள்ளார். இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஞ்சலியிடம் ஜெய்யுடனான காதலால் தான் சினிமா வாழ்க்கை வீணானதா என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், நான் காதலிக்கிறேன் என்று எப்போதும் சொன்னது கிடையாது. எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே, என்னைப் பற்றி எழுதுபவர்கள் யாரை வைத்து எழுத வேண்டும் எழுதுபவர்கள் அவர்களே முடிவு செய்து விடுவார்கள்.
ஆனால், அதைப் பற்றி நான் பேசியதும் இல்லை பேசப் போவதும் இல்லை இது போன்ற விஷயத்தை நான் செய்யவில்லை எனவே அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் என தெளிவாக பேசியுள்ளார்.

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
