தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா பற்றி நடிகை அஞ்சலி இப்படி சொல்லிட்டாரே! - லேட்டஸ்ட் பதிவு
நடிகை அஞ்சலி சமீபத்தில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்ற தெலுங்கு படத்தில் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டார். அதில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் கலந்துகொண்டிருந்தார்.
அஞ்சலி மேடையில் இருக்கும்போது அவரை பாலகிருஷ்ணா திடீரென தள்ளிவிட்டதால் நடிகை ஷாக் ஆகிவிட்டார். அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் பாலகிருஷ்ணாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.
அஞ்சலியின் பதிவு
இந்த சர்ச்சைக்கு நடுவில் பாலகிருஷ்ணா பற்றி அஞ்சலி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"கேங்ஸ் ஆஃப் கோதாவரி பட விழாவுக்கு வந்த பாலகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். பாலகிருஷ்ணாவுக்கும் எனக்கும் ஒரு நல்ல mutual respect இருக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக நல்ல நட்புடன் இருக்கிறோம். அவருடன் மீண்டும் மேடையில் இருந்தது அற்புதமாக இருந்தது" என அஞ்சலி பதிவிட்டு இருக்கிறார்.
I want to thank Balakrishna Garu for gracing the Gangs of Godavari pre-release event with his presence.
— Anjali (@yoursanjali) May 30, 2024
I would like to express that Balakrishna garu and I have always maintained mutual respect for eachother and We share a great friendship from a long time. It was wonderful to… pic.twitter.com/mMOOqGcch2