காமெடி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை அஞ்சலி.. பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு
தமிழில் கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
இவர் தற்போது ராம்சரணை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ஷங்கர் இயக்கும் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தநிலையில் தெலுங்கில் பல படங்களில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்துள்ள பிரியதர்ஷி என்ற நடிகர் முதன்முதலாக ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் கமிட்டாகியுள்ளார் அஞ்சலி.
கருணா குமார் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இப்படம் மலையாளத்தில் வெளியான நயாட்டு என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
New beginnings ? #AlluAravind @GA2Official #BunnyVass #VidyaMadhuri @priyadarshi_i #RaoRamesh @Karunafilmmaker #ManiSharma @NavinNooli #ArulVincent #AshishTeja pic.twitter.com/sacPJSLEMd
— Anjali (@yoursanjali) October 31, 2021