அண்ணாத்த படத்தின் வில்லன் இவர் தானா! புதிதாக இணைந்த பாலிவுட் நடிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை பர்ஸ்ட் லுக் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.
இதனிடையே அண்மையில் ரஜினி அண்ணாத்த படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
#AbhimanyuSingh joins the cast of #Annaatthe.@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer pic.twitter.com/t0rsg77sEr
— Sun Pictures (@sunpictures) August 14, 2021
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri