அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இது தானா!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வட்டம் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும்.
இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அப்டேட்டும் வரவில்லை.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் இப்படத்தில் ரஜினியின் பெயர் மன்னவன் என தெரியவந்துள்ளது.
மேலும் இதுவே முதலில் டைட்டிலாக வைக்கபட இருந்த நிலையில் பின்னர் அண்ணாத்த என்று வைக்கப்பட்டது.