ஒருவழியாக முடியவுள்ள அண்ணாத்த பட ஷூட்டிங், எப்போது தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை பர்ஸ்ட் லுக் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.
இதனிடையே அண்மையில் ரஜினி அண்ணாத்த படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் லக்னோவில் நடைபெற்று வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக 21-ஆம் தேதி கொல்கத்தா செல்லவுள்ளனர் படக்குழு.
அங்கு ஒருசில நாட்கள் படப்பிடிப்பு நடந்த உள்ளனர் படக்குழுவினர், அத்துடன் அண்ணாத்த படப்பிடிப்பு நிறைவடைகிறது.
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri