கேப்டன் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் எழுதிய கடிதம், வெளியான அன்ஸீன் புகைப்படம்..
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
இதனிடையே தற்போது டாப் நடிகராக உள்ள விஜய் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது கேப்டன் விஜயகாந்துடன் தான் அதிக படங்கள் நடித்திருந்தார்.
அதன்பின் ஹீரோவான விஜய் செந்தூரப்பாண்டி படத்தில் கேப்டன் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது விஜய் அப்போது கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய பழைய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. இன்று விஜயகாந்தின் பிறந்தநாள் என்பதால் அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan