லப்பர் பந்து நடிகைக்கும் அண்ணா சீரியல் நடிகருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது.. யாரு பாருங்க, அழகிய ஜோடி
சந்தோஷ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலின் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் சந்தோஷ்.
குடும்ப பின்னணியை கொண்ட, காதல் தொடராக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இந்தியில் ஒளிபரப்பான 'துஜ்சே ஹை ராப்தா' என்ற தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும்.
இந்த சீரியலை தொடர்ந்து, 'அண்ணா' என்ற சீரியலில் நடித்து வந்த இவர் சமீபத்தில் இந்த தொடரில் இருந்து விலகி படத்தில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
நிச்சயதார்த்தம்
தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வரும் சந்தோஷ். தற்போது பிளாக் ஷீப் வீடியோஸ், கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமான நடிகை மௌனிகாவை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
சமீபத்தில், வெளியான 'லப்பர் பந்து' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மௌனிகா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெற்றோர் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது, இவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu
