ஜீ தமிழின் இதயம் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபல நடிகர்.. யார் தெரியுமா?
சீரியல்
சன் மற்றும் விஜய் டிவி போலவே ஜீ தமிழிலும் இப்போது சீரியல்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தாலே இனிக்கும், இதயம் என பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் கார்த்திகை தீபம் தொடர் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகின்றன, நாளுக்கு நாள் ஜீ தமிழ் சீரியலுக்கும் அதிக வரவேற்பு தான் கிடைத்து வருகிறது.
புதிய என்ட்ரி
ரிச்சார்ட், புவி அரசு, ஜனனி அசோக்குமார் என பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் தொடர் தான் இதயம்.
கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது 300 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது என்ன தகவல் என்றால் அண்ணா தொடரில் நடிக்கும் அபினாஷ் இதயம் தொடரில் புதிய என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.
அபினாஷ் இதயம் தொடரில் என்ட்ரி கொடுக்க இருக்கும் செய்தியை கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.