அண்ணா சீரியல் : ரத்னாவிற்கு பதிலாக இசக்கி கழுத்தில் தாலி கட்டிய முத்துப்பாண்டி.. அதிர்ச்சியில் சண்முகம்
அண்ணா சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அண்ணா. மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி கொண்டிருக்கக்கூடிய ஒன்று.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் சண்முகம் எனும் கதாபாத்திரத்தில் செந்தில் நடித்து வருகிறார். இவருக்கு ரத்னா, இசக்கி, வீரலட்சுமி, கனி என நான்கு தங்கைகள் உள்ளனர்.
இதில் ரத்னாவை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சதி செய்து வருகிறார் வில்லன் முத்துப்பாண்டி. அப்படி அவர் போட்ட திட்டம் தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்வது போல் ரத்னாவை சதி வலையில் சிக்க வைத்து தாலி கட்டி விடலாம் என்பது.
இசக்கி கழுத்தில் தாலி கட்டிய முத்துப்பாண்டி
தந்தை சௌந்தரபாண்டி மற்றும் மகன் முத்துப்பாண்டி இருவரும் இணைந்து போட்ட திட்டத்தின்படி ரத்னா கழுத்தில் தாலி கட்டுவதற்கு பதிலாக அவருடைய தங்கை இசக்கி கழுத்தில் தாலி கட்டிவிட்டார்.
இதை பார்த்த சண்முகம் அதிர்ச்சியில் உறைந்துபோக, ரத்னாவிற்கு பதிலாக இசக்கி கழுத்தில் தாலி கட்டிவிட்டோமே என ஷாக்காகி நிற்கிறார் முத்துப்பாண்டி. இனி அண்ணா சீரியலில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த வீடியோ..

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
