படு கொண்டாட்டத்தில் ஜீ தமிழின் அண்ணா சீரியல் குழுவினர்... என்ன விஷயம் பாருங்க
அண்ணா சீரியல்
சன், விஜய் தொலைக்காட்சியை தாண்டி சீரியல்களில் டாப்பில் வந்து கொண்டிருக்கிறது அண்ணா சீரியல்.
விஜய் தொலைக்காட்சியில் சரவணன்-மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆன மிர்ச்சி செந்தில் இந்த அண்ணா சீரியலில் நாயகனாக நடிக்க நித்யா ராம் நாயகியாக நடித்து வருகிறார்.
கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரை துர்கா சரவணன் இயக்கி வருகிறார்.
குட் நியூஸ்
200 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அண்ணா சீரியல் குறித்து ஒரு சூப்பர் நியூஸ் வந்துள்ளது.
அதாவது ஜீ தமிழின் சீரியல்களின் டிஆர்பியை தாண்டி இந்த தொடர் முதல் இடத்தை பிடித்துள்ளதாம்.
டிஆர்பி தொடர் முன்னேறி இருப்பதை சீரியல் குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.